மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக, தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள ஞானதேசிகன் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பதவிக் காலம் முடிவடைந்ததை தொடர்ந்து வருகிற 15 ஆம் தேதி புதிய உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 6 இடங்களில் திமுக கூட்டணி 4 இடங்களிலும், அதிமுக கூட்டணி 2 இடங்களிலும் போட்டியிடுகிறது.
திமுக சார்பில் கனிமொழி, திருச்சி சிவா ஆகியோரும், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி. ராஜாவும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர் . இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள ஞான தேசிகன் மீண்டும் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக அக்கட்சியின் தலைமை இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அதிமுக சார்பில் மைத்ரேயன், இளவரசன் ஆகியோர் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.