டெல்லியை குஜ்ஜார்கள் முடக்கினர்

பழங்குடியினர் பட்டியலில் தங்களை சேர்க்கக் கோரி குஜ்ஜார் சமுகதத்தினர், இன்று டெல்லியில் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்தது மட்டுமின்றி, டெல்லிக்கு செல்லும் முக்கிய சாலைகளில் மறியல் செய்து போக்குவரத்தை முடக்கியுள்ளனர்.

குஜ்ஜார்களின் போராட்டத்தால் தலைநகர் டெல்லியில் பணியாற்றிடச் செல்லும் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

ஆனால், முழு அடைப்பினால் டெல்லியில் எந்த மாற்றமும் இல்லை. கடைகளும், வர்த்தக நிறுவனங்களும், அலுவலகங்களும் வழக்கம் போல் இயங்கி வருவதாக செய்திகள் கூறுகின்றன.

குஜ்ஜார்கள் அதிகம் வாழும் சில்லா பெல்லப்பீரா, தெற்கு டெல்லி பகுதிகளிலும் கூட கடைகள் திறந்திருந்ததாக அச்செய்திகள் கூறுகின்றன.

டெல்லியை சுற்றியுள்ள பாணிபட்டு, ஃபரிதாபாத், குர்கோவான், நொய்டா, காசியாபாத் கிய நகரங்களை இணைக்கும் சாலைகள் குஜ்ஜார்களின் போராட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பல இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களை களைக்க தடியடியும், கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டுள்ளது.

டெல்லி பெருநகரப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் மெஹ்ராலியில் உள்ள ஐயா நகரில் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது.

குஜ்ஜார்கள் போராட்டத்தினால் டெல்லியில் பதற்றம் நிலவுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்