ஹைதரபாத்தில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஹைதரபத்தில் மெக்கா மசூதியில் நடைபெற்ற வெடி குண்டு சம்பவதற்கு கண்டனம் தெரிவித்து இன்று நடந்த முழு அடைப்பு போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஹைதரபாத்தில் புகழ் பெற்ற சார்மினார் அருகே உள்ள பழமையான வரலாற்றுப் புகழ் பெற்ற மெக்கா மசூதியில் நேற்று குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 9 பேர் பலியாயினர். 50 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ம°லீம் அமைப்புகள் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன. போராட்டத்தையொட்டி பேருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. நகரின் பல பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

காவல் துறையினர் நகர் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பதற்றமானப் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைகள் மருந்து கடைகள் மற்றும் காய்கறி கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளன. அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருக்க பாதுகாப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்