நேற்று நடைபெற்ற இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் மேற்கிந்திய அணியிடம் மிகப்பெரிய உதை வாங்கியது.
மேற்கிந்திய அணி முதலில் பேட் செய்து 171/7 என்று ரன் குவிக்க, வங்கதேசம் 19.1 ஓவர்களில் 98 ரன்களுக்குச் சுருண்டு மிகப்பெரிய
தோல்வியைத் தழுவியது.
தோல்வி குறித்து வங்கதேச கேப்டன் முஷிபிகுர் ரஹிம் கூறியதாவது:
'முன்பெல்லாம் எங்கள் வீரர்கள் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். ஆனால் கடந்த 3 மாதங்களாக இது நடக்கவில்லை
இதனால் சில வீரர்கள் அணியில் இடத்தை தக்க வைக்க நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த இடத்தில்தான் நெருக்கடி ஏற்பட்டு சுதந்திரமாக ஆட முடியாமல் போய்விடுகிறது. T20 கிரிக்கெட்டில் விரைவில் ரன் குவிப்பில் ஈடுபடவேண்டும், பார்மில் இல்லாத பேட்ஸ்மென்கள் இடத்தைத் தக்கவைக்கும் நெருக்கடியில் இருப்பதால் விரைவு ரன் குவிப்பில் ஈடுபட
முடியவில்லை. இப்படி நாம் சிந்திக்கலாகாது, கடந்த 2 ஆண்டுகளாக எத்தகைய இயல்பான ஆட்டத்தைக் கையாண்டோமோ அதையேதான் ஆடவேண்டும்.
அணியில் உள்ள பெரும்பான்மை வீரர்கள் ஆட்டத்திறனை வெளிப்படுத்த முடியாத மன நிலையில் உள்ளனர். இந்த நிலையை நாம் விரைவில் சரி செய்வது அவசியம்.
வீரர்கள் பலர் மன ரீதியாக நெருக்கடி அடைந்திருப்பதனால் அவர்கள் பேட்டிங், பவுலிங் பார்ம் தடுமாறுகிறது, இது பீல்டிங்கிலும் வெளிப்படுகிறது.
இவ்வாறு கூறினார் முஷ்பிகுர். சாமுயெல் பத்ரி நேற்று சிறபாக விச்சி 4 விக்கெட்டுகளையும் இடது கை மிதவேகப்பந்து வீச்சாளர் சன்டோகி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
இன்று ஆட்டங்கள் எதுவும் இல்லை. ஓய்வு நாள்.