'டேட்டிங்' போனால் உளவியல் பிரச்சனை தாக்கும்

வெள்ளி, 2 ஆகஸ்ட் 2013 (15:02 IST)
FILE
அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் 'டேட்டிங்' செல்லும் இளைஞர்கள் உளவியல் ரீதியான பாதிப்பிற்கு ஆளாவதாக தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் 14 - 20 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடம் 2011 - 2012 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் டேட்டிங்கில் ஈடுபடும் மூவரில் ஒருவர், உடல், மனம் மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உட்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேட்டிங்கில் ஈடுபட்ட, அமெரிக்க இளைஞர்கள், 1,058 பேரிடம் நடத்திய ஆய்வின் அடிப்படையில், அமெரிக்காவில் டேட்டிங்கில் ஈடுபடும், மூன்றில் ஒரு பங்கு இளைஞர்கள், உடல் அளவிலும், மனதளவிலும் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

இதில், 41 சதவீதம் பெண்கள், பாலியல் ரீதியான பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். 37 சதவீதம் ஆண்கள், பெண்களால் துன்புறுத்தப்படுகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் நட்பு ரீதியான டேட்டிங்கில், ஈடுபடும் இளைஞர்கள் தன்னுடன் வந்தவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதால் இத்தகைய பிரச்சனைகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்