அதிபர் பஷர் அல் அசாத் படையினர் ரஷ்யா ஜெட் விமானம் மூலம் நடத்திய மோசமான குண்டு வீச்சு தாக்குதலில் போராளிகள் இருபதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
சிரியாவில் உள்நாட்டு போர் விவகாரத்தில், அசாத் ஆதரவாளர்களுக்கும், எதிர்பு போராளிகளுக்கும் எதிர்மறை தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தலைநகர் டமாஸ்கஸ் அருகில் உள்ள மிலெஹா பெட்ரோல் பங்கை குறிவைத்து போர்விமானம் குண்டுகள் வீசியது. இந்த மோசமான தாக்குதலில் பெட்ரோல் மற்றும் எரிவாயு நிரப்புவதற்காக வாகனங்களில் காத்திருந்தோர் மற்றும் பொதுமக்கள் என இருபதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
ரஷ்யா ஜெட் விமானம் மூலம் குண்டு வீசப்பட்டதாக போராளிகள் தெரிவித்துள்ளனர். இந்த மோசமான தாக்குதலில் கார்கள் மற்றும் பெட்ரோல் பங்குகளும் தீப்பிடித்து எரிந்தன.