தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதிப் பொறுப்பாளர் ரத்னசபாபதி விடுதலை செய்யப்பட்டுள்ளார் என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆயுத வலையமைப்பின் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனையும் அரசாங்கம் விடுதலை செய்துள்ளதாக அப்பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
குமரன் பத்மநாதன் விடுதலை செய்யப்படுவதற்கு முன்னதாக நிதிப் பொறுப்பாளர் ரத்னசபாபதி விடுதலை செய்யப்பட்டார் என செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
குமரன் பத்மநாதனை இலங்கை அரசாங்கம் விடுதலை செய்த போதிலும், சர்வதேச குற்றவாளிகள் பட்டியலிலிருந்து குமரன் பத்மநாதனின் பெயர் இன்னமும் நீக்கப்படவில்லை.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குமரன் பத்மநாதனுக்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, குமரன் பத்மநாதனை விடுதலை செய்யவில்லை எனவும் ஊடகங்களில் வெளியான தகவல் பிழையானது எனவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஸ்மன் ஹுலுகல்ல அண்மையில் தெரிவித்திருந்தார்.