சீனா-ஜப்பான் மோதல் முற்றுகிறது தீவு பகுதியில் 1,000 சீன படகுகள்

செவ்வாய், 18 செப்டம்பர் 2012 (20:20 IST)
சீனா, ஜப்பான் நாடுகளின் கடல் பகுதியில் அமைந்துள்ள 2 தீவுகள் உரிமை தொடர்பாக இரு நாடுகள் இடையே பிரச்சினை நிலவுகிறது.

இது தற்போது மோதலாக மாறியுள்ளது. இதனால் சீனாவில் செயல்படும் பிரபல ஜப்பான் நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை மூடி விட்டன.

கடந்த சில நாட்களாக கடைகளையும் அடைத்து விட்டனர். அங்கு பணியாற்றும் ஊழியர்களை ஜப்பானுக்கு திரும்பி அனுப்ப ஏற்பாடு செய்து வருகின்றன.

இதன் விளைவாக 2 நாடுகள் இடையே வர்த்தகம் பெரும் அளவில் பாதிக்கும் என்ற அச்சம் உருவாகியுள்ளது. அத்துடன் பீஜிங்கில் உள்ள ஜப்பான் தூதரகம் பாஸ்போர்ட் வழங்குவதை நிறுத்தவும் தீர்மானித்துள்ளது.

இதற்கிடையில் பிரச்சினைக்குரிய தீவு பகுதியில் சீனாவின் 1,000 மீன்பிடி படகுகள் முற்றுகையிட்டு, இது எங்கள் கடல் பகுதி என்றும், இங்கிருந்து ஜப்பான் கடலோரப்படை வெளியேற வேண்டும் என்றும் ரேடியோ மூலம் அறிவித்தனர். ஜப்பான் கடலோர பாதுகாப்பு படையினர் அங்கேயே முகாமிட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்