பிலிப்பைன்ஸ், தாய்வானில் புயல் மற்றும் மழைக்கு 42 பேர் பலி
வெள்ளி, 3 ஆகஸ்ட் 2012 (18:01 IST)
பிலிப்பைன்ஸ் மற்றும் தைவான் நாட்டில் சாவ்லா புயல் காரணமாக கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதில் 42 பேர் பலியாகியுள்ளனர்.
சூறாவளி காற்றினால் வீடுகள் இருந்த அடையாளமே இல்லாமல் நகரே நீரால் சூழப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கி பிலிப்பைன்சில் மட்டும் 37 பேர் , மேலும் தைவானில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 3 லட்சம் மக்கள் வசிப்பிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பலரை காணவில்லை என்று கூறபடுகிறது.
சீனாவில் சாவ்லா புயல் இன்று காலையில் கரையைக் கடந்தபோது, மணிக்கு 155 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. தொடர்ந்து கனமழையும் பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது .
தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. சர்வதேச விமான நிலையமும் கடுமையாக பாதிக்கப்பட்டதால் அங்கிருந்து கிளம்பும் 29 விமானங்கள் , தரைவழி போக்குவரத்து முடங்கியுள்ளது.