ஒசாமாவின் உடல் அமெரிக்காவில் அடக்கம் - விக்கிலீக்ஸ்
வியாழன், 8 மார்ச் 2012 (01:05 IST)
ஒசாமாவின் உடல் அரபிக் கடலில் அடக்கம் செய்யப்படவில்லை மாறாக அமெரிக்காவில் தான் அடக்கம் செய்யப்பட்டதாக பரபரப்பு தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
அல்கொய்தா இயக்கத்தின் தலைவருமான ஒசாமா பின்லேடனை அமெரிக்க ராணுவம் கடந்த ஆண்டு மே 2-ந்தேதி சுட்டுக் கொன்றது.
அவரது உடலை உறன்வினர்கள் யாரிடமும் ஒப்படைக்காமல் வடக்கு அரபிக் கடலில் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ததாக அமெரிக்கா அறிவித்தது.
ஆனால் அவரின் உடல் அமெரிக்காவில் தான் அடக்கம் செய்யப்பட்டது என விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
ஸ்ட்ராட்போர் என்ற நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரட் பர்ட்டன் தனது அதிகாரிக்கு எழுதியுள்ள மின்னஞ்சலில்,
பாகிஸ்தானின் அப்போதாபாத் நகரில் கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்ட ஒசாமா பின் லேடனின் உடல் அமெரிக்க அரசு கூறியபடி கடலில் புதைக்கப்படவில்லை.
ஒசாமாவின் உடலை பரிசோதனை செய்ய சிஐஏ முடிவு செய்தது. முதலில் தெல்வேர் மாகாணத்தின் தோவர் நகருக்கு சிஐஏவின் விமானத்தில் ஒசாமாவின் உடல் கொண்டு வரப்பட்டது.
பின்னர் மேரிலாண்டின் பெடஸ்டா பகுதியில் உள்ள ராணுவத்தின் நோய் தடுப்பியல் ஆராய்ச்சி மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது என எழுதியுள்ளார்.
இந்த ரகசிய மின்னஞ்சலை விக்கிலீக்ஸ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.