ஈரானில் போர் பதற்றம்: யு.எஸ். போர்க்கப்பல் விரைவு

வியாழன், 16 பிப்ரவரி 2012 (18:39 IST)
ஈரானில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக அமெரிக்க போர்க்கப்பல் துறைமுகப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

ஈரான் அதிநவீன தொழில் நுட்பத்தின் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா கருதுகிறது.

எனவே, இஸ்ரேலின் பாதுகாப்புக்காக தனது ஆபிரகாம் லிங்கன் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பலை ஸ்ரெய்ட் ஆப் ஹோர்ம்ஸ் துறைமுகம் பகுதிக்கு அனுப்பி உள்ளது.

இந்த போர்க் கப்பலில் அணு ஆயுதங்கள் உள்ளன.இது ஸ்ரெய்ட்ஸ் ஆப் ஹோர்ம்ஸ் துறைமுகத்தில் இருந்து 21 கடல் மைல் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

அதன் அருகே 2 கடல் மைல் தூரத்தில் தான் ஈரான் கப்பற்படை படகுகள் ரோந்து சுற்றி வருகின்றன.இதனால், அங்கு போர் பதற்றம் நிலவுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்