இந்தியப் பெருங்கடலில் இராணுவத் தளம் அமைக்கிறது சீனா
திங்கள், 12 டிசம்பர் 2011 (15:54 IST)
இந்தியப் பெருங்கடலில் உள்ள ஷெசல்ஸ் தீவில், தனது இராணுவத் தளத்தை அமைக்கப் போவதாக சீனா அறிவித்துள்ளது.
கடற்படைக்கு எரிபொருள், ஆயுத சப்ளை செய்ய இந்த தளத்தை அமைக்கவுள்ளதாக சீன பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே தனது தென் சீனக் கடல் பகுதியிலிருந்தும், இலங்கையின் வட பகுதியில் அமைத்துள்ள கடற்படைத் தளத்தின் மூலமூம் இந்திய நீர்மூழ்கிகள், போர்க் கப்பல்களை சீனா கண்காணித்து வருகிறது.
இப்போது ஆப்பிரிக்க கண்டத்துக்கு கிழக்கே உள்ள இந்த ஷெசல்ஸ் தீவிலும் தனது இராணுவத் தளத்தை அமைப்பதன் மூலம், இந்தியாவை மூன்று பக்கத்தில் இருந்தும் சீனா கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.