''பத்திரிகைகளுக்கு நான் பயப்பட மாட்டேன்'' என்று இலங்கை அதிபர் ராஜபக்ச கூறியுள்ளார்.
கொழும்பில் நடந்த செவிலியருக்கான படிப்பை முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், பல்வேறு விதமான பத்திரிகைகளில் வரும் செய்திகளுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். அவ்வாறு பயந்துகொண்டிருந்தால் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியாது என்றார்.
இலங்கையில் ஏராளமான குப்பை பத்திரிகைகள் வெளியாகின்றன என்றும் ராஜபக்ச கூறினார்.
பொதுமக்கள் பத்திரிகைகளில் வரும் செய்திகளை அப்படியே நம்பிவிடாமல் அவற்றின் உண்மைத்தன்மையை ஆராய்வது அவசியம் என்றார் ராஜபக்ச.