இலங்கை நாடாளுமன்றத்தில் கொள்ளையர்களும், கொலைகாரர்களுமே அதிகம்: சந்திரிகா

திங்கள், 17 அக்டோபர் 2011 (12:17 IST)
இலங்கை நாடாளுளுமன்றத்தில் கொள்ளையர்களும், கொலைகாரர்களுமே அதிகம் பேர் உள்ளதாக முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளார்.

சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் இவ்வாறு கூறிய அவர்,கல்வித்துறையின் மூலம் இந்த சமூகத்தை சீர்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்றும்,அவ்வாறு இல்லாவிட்டால் இந்த சமூகம் சீரழிந்து விடும் என்றும் தெரிவித்தார்.

நாட்டின் வளங்களைக் கொள்ளையிடுவதற்காகவே தேர்தலில் போட்டியிடுகின்றனர். நாட்டில் மிகவும் லாபகரமான வியாபாரமாக தற்போது அரசியல் மாற்றமடைந்துள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்

வெப்துனியாவைப் படிக்கவும்