சர்ச்சைக்குரிய பிரபல ஓவியர் எம்.எப் ஹூசைனின் உடல் அடக்கம் லண்டனில் நடந்து முடிந்தது.
இந்தியாவைச் சேர்ந்த பிரபல ஓவியர் எம்.எப்.ஹூசைன் சர்ச்சைக்குரிய ஓவியரான இவர் இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் குடி புகுந்தார்.
உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 95. அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக லண்டனில் வைக்கப்பட்டது.
இந்திய தூதர் நலின் சூரி, தொழில் அதிபர் லட்சுமி மித்தல், இந்துஜா குரூப் துணை தலைவர் ஜி.பி. இந்துஜா உள்பட பல முக்கிய பிரமுகர்கள் அவரது உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
ஓவியர் எம்.எப்.உசேன் உடல் இஸ்லாமிய முறைப்படி லண்டனில் புரூக்உட் என்ற இடத்தில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.