எகிப்து தேவாலயத்தில் கார் குண்டு தாக்குதல்: 21 பேர் பலி

சனி, 1 ஜனவரி 2011 (16:55 IST)
எகிப்து நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 21 பேர் பலியாயினர்.

எகிப்து நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள அலெக்சாண்டிரியா நகரில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

அங்கு உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் புத்தாண்டையொட்டி நேற்று நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. அப்போது தேவாலயத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரில் குண்டு வெடித்தது. இதனால் கார் தீப்பிடித்து எரிந்தது.

இதை தொடர்ந்து மேலும் 2 கார் குண்டுகள் வெடித்தன. இந்த தாக்குதல்களில் 21 பேர் அதே இடத்தில் பலியானதாகவும், மேலும் பலர் காயம் அடைந்தததாகவும் காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்