வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் இன்று நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பில் 10 பேர் பலியானார்கள்; 20 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
பெஷாவர் நகரில் உள்ள யாட்கர் சவுக் என்ற இடத்தில் அமைந்திருக்கும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மீன பஜாரில்,இன்று மதியம் 12.30 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
குண்டுவெடிப்பு எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்த விவரம் உடனடியாக தெரியவரவில்லை என்றபோதிலும்,தற்கொலை தாக்குதல் மூலமே இந்த தாக்குதல் நிகழ்ந்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது.
இந்த குண்டுவெடிப்பு குறித்த பாகிஸ்தான் அதிகாரிகள் தரப்பில் அதிகாரப்பூர்வமாக இதுவரை எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தின் அருகே அமைந்திருந்த பல கடைகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்ததாகவும்,அந்த இடமே புகை மூட்டமாக காணப்பட்டதாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறியதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.