நியூஸீலாந்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

வெள்ளி, 17 ஜூலை 2009 (10:43 IST)
நியூஸீலாந்தின் தெற்குப் பகுதியில் இன்று அதிகாலை அடுத்தடுத்து 2 மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் முறையே 5.3 மற்றும் 5.6 ஆகப் பதிவானதாக நியூஸீலாந்து நிலநடுக்க கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 15ஆம் தேதி சௌத் ஐலண்ட் தீவுப் பகுதியில் 7.8 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 7.5 கி.மீ ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம், கடந்த 80 ஆண்டுகளில் பதிவான நிலநடுக்கங்களில் மிகவும் அதிக சக்தி வாய்ந்ததாக கருதப்பட்டது.

இந்நிலையில், அந்த பயங்கர நிலநடுக்கத்தின் எதிரொலியாக இன்று காலை 2 முறை பின்அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானி மார்டின் ரெய்னெர்ஸ் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்