முல்லைத்தீவில் தாக்குதல்: 102 தமிழர்கள் பலி

ஞாயிறு, 19 ஏப்ரல் 2009 (11:01 IST)
இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது சிறிலங்கா படையினர் நேற்று நடத்திய தாக்குதல்களில் 102 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை பகுதிகளில் சிறிலங்கா படையினர் நேற்று (வெள்ளி) காலை துவங்கி இரவு வரை எறிகணை, வெடிகணை, துப்பாக்கிச் சூடு தாக்குதல்களை நடத்தினர்.

இதில் 102 தமிழர்கள் கொல்லப்பட்டதுடன், 156க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக புதினம் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்கூறிய பகுதிகளில் உள்ள 3 மருத்துவ சிகிச்சை நிலையங்களில் காயமடைந்த மக்களுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும், திலீபன் மருத்துவ சேவைப் பிரிவினரும் காயமடைந்த மக்களுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர்.

முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் வாழ்விடங்கள் மீதும் சிறிலங்கா படையினர் நேற்று கடுமையான எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர். மாத்தளன் பகுதி மீதும் சிறிலங்கா படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்