இலங்கை நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் - மத்திய அரசு பேச்சுவார்த்தை

ஞாயிறு, 12 ஏப்ரல் 2009 (11:38 IST)
இலங்கை பிரச்சனை தொடர்பாக, புலிகளுக்கு ஆதரவான தமிழ் தேசிய கூட்டணி கட்சி‌யி‌ன் நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் வரும் 16 மற்றும் 17ம் தேதிகளில் டெல்லியில் இந்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.

இலங்கையில் சிங்களப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் போருக்கு பின்னர் ஏற்படும் நிலைமை குறித்து பேச்சு வார்ததை நடத்துவதற்காக இந்தியா வரும்படி இலங்கையில் புலிகளுக்கு ஆதரவான தமிழ் தேசிய கூட்டணி கட்சிக்கு, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் அழைப்பு விடுத்திருந்தார்.

இதுதொடர்பாக, தமிழ் தேசிய கூட்டணி கட்சியின் நாடாளு‌ம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் ஆலோசனை நடத்தினர். முதலில், இந்தியாவின் அழைப்பை நிராகரிக்க முடிவு செய்யப்பட்ட போதிலும், பின்னர் இந்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, அக்கட்சியின் 5 நாடாளும‌ன்ற உ‌று‌ப்‌பின‌ர்க‌ள் கொண்ட குழு வரும் 16 மற்றும் 17ம் தேதிகளில் டெல்லியில் நடைபெறும் பேச்சு வார்த்தையில் பங்கேற்கிறது.

இலங்கை பிரச்சனை தொடர்பாக, இந்திய அரசு செய்த தவறுகளை சுட்டிக்காட்டுவதற்காகவே தமிழ் தேசிய கூட்டணி கட்சி நாடாளும‌ன்உ‌று‌ப்‌பின‌ர்க‌ள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ள முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்