வன்னி நிலை : மகிந்தாவுடன் பான் கி மூன் பேச்சு

வன்னிப் பகுதியில் மோசமடைந்துவரும் மனிதாபிமானப் பிரச்சனை தொடர்பாக சிறிலங்க அதிபர் மகிந்தா ராஜபக்சவுடன் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் பேசியுள்ளார்.

தற்போது லிபியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் சிறிலங்க அதிபர் மகிந்தா ராஜபக்சவை நேற்று இரவு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய பான் கி மூன், வன்னியில் பொதுமக்களின் இழப்புகள் அதிகரித்து வருவதால் போர் நிறுத்தம் செய்யப்படுவது அவசியம் என வலியுறுத்தியுள்ளதாக ஐ.நா. அதிகார் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பெருமளவிலான மக்கள் அடைக்கலமாகியுள்ள பாதுகாப்பு வலயப் பகுதி மீது சிறிலங்க படையினர் பெரும் தாக்குதலை நடத்தக்கூடும் என்ற நிலையிலேயே, ராஜபக்சவை அவசரமாக தொலைபேசியில் தொடர்புகொண்டு பான் கி மூன் பேசியுள்ளதாகத் தெரிகிறது.

பொதுமக்களுடைய நிலைமை தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கொண்டுள்ள அக்கறையை தன்னால் புரிந்துகொள்ள முடிவதாக மகிந்த ராஜபக்ச பதிலளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்