சீனா: நிலக்கரிச் சுரங்க விபத்தில் 73 பேர் பலி

ஞாயிறு, 22 பிப்ரவரி 2009 (15:05 IST)
பீஜிங்: சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள நிலக்கரிச் சுரங்கம் ஒன்று வெடித்துச் சிதறி ஏற்பட்ட விபத்தில், சுரங்கத்தில் பணியில் இருந்த 73 தொழிலாளர்கள் பேர் பலியாயினர்.

ஷாங்ஸி மாகாண தலைநகர் தையூன் அருகே உள்ள குஜ்ஜியாவோ என்ற நகரில் தனியார் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமானது இந்த நிலக்கரி சுரங்கம்.

இதில் சுமார் நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது நிலக்கரிச் சுரங்கத்தின் ஒரு பகுதி இன்று அதிகாலை திடீரென வெடித்துச் சிதறியது.

இதில் அங்கு பணி புரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் 73 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதுவரை 44 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பல உடல்கள் மீட்கப்படாமல் உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் பீஜிங் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்