பாகிஸ்தானின் மத்தியப் பகுதியில் பஞ்சாப் மாநிலம் தேரா காஜிகான் நகரில் மசூதிக்கு அருகே தற்கொலைப்படையினர் நடத்திய தாக்குதலில், 30 ஷியா முஸ்லிம்கள் உயிரிழந்தனர். 50 பேர் காயம் அடைந்தனர்.
மசூதி அருகே ஷியா முஸ்லிம்கள் ஊர்வலமாகச் சென்ற போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், மனித வெடிகுண்டாக செயல்பட்டவரும் வெடித்துச் சிதறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊர்வலத்தில் சென்றவர்களில் பலர் உயிர் இழந்ததாகவும், மொத்தம் 30 பேர் வரை பலியாகி இருக்கக்கூடும் என்றும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.
வெடிகுண்டு தாக்குதலில் மசூதியும், அருகே இருந்த கட்டிடமும் பலத்த சேதம் அடைந்தது. இந்த தாக்குதலின் பின்னணியில் தாலிபான் தீவிரவாதிகளுக்குத் தொடர்பு இருக்கக் கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.