தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இன்னமும் அயல்நாட்டு பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில்தான் உள்ளது என்று அமெரிக்க அயலுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
வாஷிங்டனில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அந்நாட்டு அயலுறவு அமைச்சகத்தின் தற்காலிக பேச்சாளர் ராபர்ட் உட்-டிடம், விடுதலைப் புலிகள் மீதான தடையை விலக்கிக்கொள்வது குறித்து அமெரிக்க அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு, “அப்படி ஒரு பரிசிலனை நடைபெற்று வருவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், அயல்நாட்டு பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் விடுதலைப் புலிகள் இயக்கம் இன்று வரை உள்ளது” என்று கூறியுள்ளார்.