ஆப்கானிஸ்தானில் நிலைமை அபாயகரமாக உள்ளது: வெள்ளை மாளிகை

செவ்வாய், 27 ஜனவரி 2009 (13:58 IST)
ஆப்கானிஸ்தானில் தற்போதைய பாதுகாப்பு நிலைமை அபாயகரமான நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை, அது மேலும் பலவீனமடையாமல் தடுக்கவும், அந்நாட்டில் உள்ள அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்கவும் தேவையான நடவடிக்கைகளை புதிய அதிபர் பராக் ஒபாமா மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளது.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ், ஆப்கனில் நிலைமை அபாகரமாக உள்ளதால் கூடுதல் படைகளை அனுப்புவோம் என அதிபர் ஒபாமா தனது பிரசாரத்தின் போது கூறியிருந்தார் என்றும், கடந்த 2001இல் நடத்தப்பட்டது போன்ற பயங்கரவாதத் தாக்குதலை மீண்டும் நடத்துவதற்காக பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருவதாகவும் கூறினார்.

ஆப்கனில் உள்ள அமெரிக்கர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில், அந்நாட்டின் நிலையை மேலும் மோசமடைவதைத் தவிர்க்கப்படும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்