கென்யா தலைநகர் நைரோபியில் இருந்து மொம்பஸா நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து, எதிரே வந்த லாரி மீது மோதிய விபத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 24 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் எரிக் கிரெய்த்தி கூறுகையில், கம்பூ மார்க்கெட் அருகே உள்ள டிடோ அன்டெய் பகுதியில் இந்த விபத்து நடந்ததாகவும், இதில் விபத்துக்குள்ளான இரு வாகனங்களின் ஓட்டுனர் உட்பட 29 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவித்தார்.
நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் பேருந்து விபத்துக்குள்ளானதாகவும், அப்போது அதில் 51 பயணிகள் இருந்ததாகவும் அவர் கூறினார்.