சிக்கலில் அமெரிக்க பொருளாதாரம்: ஒபாமா

செவ்வாய், 6 ஜனவரி 2009 (17:17 IST)
பொருளாதாரச் சரிவு காரணமாக சிக்கலில் உள்ள அமெரிக்காவின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக அதிபர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமா கூறியுள்ளார்.

அமெரிக்காவின் முன்னணி பொருளாதார ஆலோசகர்களுடன் நாட்டின் நிதி நிலைமை குறித்து விவாதிக்க ஒபாமா, அக்கூட்டத்தில் பேசுகையில், தற்போதை இக்கட்டான சூழலில் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சூழல் மிகவும் மோசமாகி வருகிறது.

நான் ஏற்கனவே கூறியபடி, நிலைத்தன்மையுடன், பொறுமையாக இருப்பதே நமக்கான முக்கிய கடமையாகும். பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அது சுகவீனமாக இருப்பதால் அதனை நிலைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஆனால் நம் எதிர்கால சந்ததியினருக்கு சிறப்பான பொருளாதார ‌நிலையை அளித்து விட்டுச் செல்ல வேண்டும் என நாம் விரும்பினால், இந்தச் சரிவை சரிசெய்ய நம்மால் சரி செய்ய முடியாது என்ற எண்ணம் தோன்றாது.

இன்றைய நிலவரப்படி முக்கியமான தகவல் என்னவென்றால் நாட்டின் பொருளாதாரச் சூழல் மோசமாகிக் கொண்டிருக்கிறது. நாம் தைரியமாகவும் அதே சமயம் உடனடியாகவும் செயல்பட வேண்டும்; தாமதிக்கக் கூடாது என்றார்.

தற்போது எழுந்துள்ள பிரச்சனை குடியரசுக் கட்சி அல்லது ஜனநாயகக் கட்சிக்கு எழுந்துள்ள பிரச்சனை கிடையாது. ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சனை. எனவே, அனைவரு‌க்கு‌ம் இதில் பங்கு உண்டு என்பதால் கடின உழைப்பு தேவைப்படும் என்றார்.

இதே கருத்தை தன்னை சந்தித்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஒபாமா வலியுறுத்தியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்