பாக். நலன் கருதி ஜமாத்-உத்-தவா மீது நடவடிக்கை: சர்தாரி

மும்பை பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஜமாத்-உத்-தவா அமைப்பை ஒடுக்குவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை நாட்டின் நலன் கருதியே எடுக்கப்படும் எனக் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கூறியுள்ளார்.

மேலும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட முறையிலேயே அதிகாரிகள் மேற்கொள்வர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மக்கள் கட்சியினரின் கூட்டணித் தலைவர்களுடன் நேற்று சந்திப்பு நடத்திய சர்தாரி, பாகிஸ்தான் அமைதியை விரும்புவதைக் காரணம் காட்டி அதனை பலவீனமாக கருதக் கூடாது என கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளையில் தேசத்தின் பரவலான நலன் கருதியே ஜமாத்-உத்-தவா அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே மேற்கொள்ளப்படும் என்றும் சர்தாரி கூறியதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்