நியூஸீலாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள கெர்மடெக் தீவுக் கூட்டத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 5.1 ஆகப் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யு.எஸ்.ஜி.எஸ்) தெரிவித்துள்ளது.
இந்திய நேரப்படி இன்று காலை 8.31 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரவோல் தீவில் இருந்து 249 கி.மீ தொலைவில், பூமிக்கடியில் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டதாக யு.எஸ்.ஜி.எஸ் கூறியுள்ளது.
எனினும் இந்த நிலநடுக்கம் காரணமாக அதிகளவில் பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.