ஸ்வீடனின் தெற்குப் பகுதியில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 4.7 ஆகப் பதிவாகியுள்ளதாக உப்ஸாலா பல்கலைக்கழக நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை 6.20 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மல்மோய் நகருக்கு தென்கிழக்கே 59 கி.மீ தொலைவில் மையம் கொண்டதாக அந்த மையம் வெளியிட்ட தகவல் கூறுகிறது.
டென்மார்க்கின் வடக்குப் பகுதி, தலைநகர் கோபன்ஹேகன், ஸ்வீடனின் தெற்குப் பகுதி ஆகியவற்றில் இந்த நிலநடுக்கத்தை உணர முடிந்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் பெரியளவில் பொருட் சேதமோ, உயிர்ச் சேதமோ ஏற்படவில்லை என்றாலும் ஸ்வீடனைப் பொருத்தவரை இது மிகப் பெரிய நிலநடுக்கமாகவே கருதப்படுகிறது.