அமெரிக்க வற்புறுத்தலுக்கு அடிபணிய மறுத்துள்ள ஈரான், யுரேனியம் செறிவூட்டல் நடவடிக்கைகளை நிறுத்த முடியாது என்று கூறியுள்ளது.
ஜனநாயக கட்சி ஆட்சிப்பொறுப்பு ஏற்கவுள்ள நிலையிலும் அமெரிக்கா, ஈரானின் யுரேனிய செறிவூட்டல் நடவடிக்கை குறித்த பழைய நிபந்தனைகளை வலியுறுத்தினால், அவர்களுக்கான விடை இதுதான்: "ஈரான் ஒரு போதும் யுரேனிய செறிவூட்டல் நடவடிக்கைகளை நிறுத்தாது" என்று ஈரான் அயலுறவு அமைச்ச்க செய்தித் தொடர்பாளர் ஹஸன் குவாஷ்காவி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, அமெரிக்காவின் புதிய அதிபர் பாரக் ஒபாமா, ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டல் நடவடிக்கைகளை நிறுத்தினால் பொருளாதார உதவிகளை செய்வதாக நேற்று அறிவித்துள்ளார்.
முன்னதாக, யுரேனியம் செறிவூட்டல் அணு குண்டுகள் தயாரிப்பதற்காகவே செய்யப்படுகிறது என்று கூறிய அமெரிக்கா, ஈரான் அடிபணியவில்லை எனில் பொருளாதார தடைகள் மேலும் இறுக்கமடையும் என்று எச்சரித்தது.