ஜப்பானில் மிதமான நிலநடுக்கம்

வியாழன், 4 டிசம்பர் 2008 (14:35 IST)
ஜப்பானின் வடக்குப் பகுதியில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 6.1 ஆகப் பதிவானதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.47 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தலைநகர் டோக்கியோவில் இருந்து 290 கி.மீ தொலைவில் வடக்கே உள்ள மியாகி கடற்கரைப் பகுதியில் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டது.

எனினும், அதனைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ஏதுவும் விடுக்கப்படவில்லை என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்