மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான பர்கினா பாசோவில் பேருந்தும், லாரி ஒன்றும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் இரு வாகனங்களும் தீப்பற்றிக் கொண்டன. இந்த விபத்தில் 66 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர்.
பொரோமோ நகரில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு பேருந்து புறப்பட்டு சென்றது. எதிரே சர்க்கரை ஏற்றி வந்த ஒரு லாரியுடன், அந்தப் பேருந்து பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் பேருந்தும், லாரியும் தீப் பிடித்துக் கொண்டன. பேருந்தில் இருந்த 70க்கும் மேற்பட்ட பயணிகளில் 66 பேர் தீயில் உடல் கருகி பலியாகி விட்டனர்.
இதுவரை 55 கருகிய உடல்கள் மீட்கப் பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாலைகள் மிக மோசமாக இருந்ததே இந்த விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.