சிறிலங்க இராணுவ ஒதுக்கீடு 160 கோடி டாலர்!

வெள்ளி, 7 நவம்பர் 2008 (14:28 IST)
ிறிலங்க இராணுவத்திற்கு இந்த நிதியாண்டில் 160 கோடி டாலர்களை ஒதுக்கியுள்ளதாக அந்நாட்டின் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த அதிபர் மகிந்தா ராஜபக்சே கூறியுள்ளார்.

சிறிலங்க நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்துப் பேசிய ராஜ பக்சே, விடுதலைப் புலிகள் சரண்டைய வேண்டும் அல்லது தோல்வியை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்று கூறியுள்ளார்.

“ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு ஜனநாயக பாதைக்குத் திரும்புங்கள் என்பதே பயங்கரவாதிகளுக்கு நான் விடுக்கும் தாழ்மையான வேண்டுகோள், இதனை கேட்கவில்லையென்றால் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்படுவீர்கள்” என்று கூறிய ராஜபக்சே, பயங்கரவாததினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மறு சீரமைப்பிற்காக பல பொருட்களின் மீதும், சேவைகளின் மீதும் ஒரு விழுக்காடு வரி விதிப்பதாக அறிவித்துள்ளார்.

இராணுவத்தினருக்கும் அளிக்கும் சிறப்புப் படியை ரூ.3,000த்திலிருந்து ரூ.5,000 ஆக உயர்த்துவதாகவும் ராஜபக்சே அறிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்