அமெரிக்காவின் முதல் கறுப்பின பெண்மணி!

வெள்ளி, 7 நவம்பர் 2008 (00:54 IST)
தனது கணவர் பராக் ஒபாமாவின் வெற்றிக்கு பின்னணியில் இருந்து செயலாற்றியதில் அவரது மனைவி மிச்சைல் ஒபாமாவிற்கு மிகப்பெரிய பங்குண்டு.

தற்போது அமெரிக்காவின் முதல் கறுப்பினப் பெண்மணி (First lady) என்ற பெருமையை மிச்சைல் பெற்றுள்ளார்.

யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பத்தில் இருந்த நடுநிலை வாக்காளர்களை பாரக் ஒபாமாவுக்கு சாதகமாக மாற்றியதில் மிச்சைல் முக்கிய பங்கு வகிதார்.

அமெரிக்காவின் அதிபர் என்ற நிலைக்கு பராக் ஒபாமாவை உயர்த்தியன் மூலம் முதல் கறுப்பின பெண்மணி என்ற பெருமையை பெறுகிறார்.

சிகாகோவின் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில் மக்கள் தொடர்பு துறையில் அதிகாரியாக பணிபுரிந்தார் மிச்சைல் ஒபாமா. முன்னாள் அமெரிக்க முதல் பெண்மணி ஜாக்குலின் கென்னடிக்குப் பிறகு அதிக புகழ்பெற்றவராக மிச்சைல் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

44 வயதாகும் மிச்சைல் ஒபாமா மிகவும் எளிய தோற்றத்துடன் காணப்படுகிறார். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின் ஒரு பெண் உள்ளார் என்ற பழமொழி, ஒபாமா விஷயத்தில் உண்மை என்றே கூறலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்