ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் அல்-கய்டா அமைப்பின் முக்கியத் தலைவர் உட்பட 19 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் கோஷ்ட் மாகாணத்தில் உள்ள நன்கர்ஹார் பகுதியில் நேற்று நடத்தப்பட்ட இத்தாக்குதலில் அப்பாவிப் பொது மக்களும் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியானதாக அந்நாட்டு காவல்துறை தலைவர் கூறியுள்ளார்.
கோஷ்ட் மாகாண காவல்துறை தலைவரின் செய்தித் தொடர்பாளர் வாசிர் பாச்சா கூறுகையில், பொதுமக்கள் பலியாகி உள்ளனரா என்பது குறித்து விசாரிக்க காவல்படை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நன்கர்ஹாரில் செயல்பட்டு வந்த வெடிகுண்டு தயாரிக்கும் இடத்தில் நடத்தபட்ட தாக்குதலில், அல்கய்டாவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஜலாலுதீன் ஹக்கானி உட்பட 10 தீவிரவாதிகள் உயிரிழந்ததாக அமெரிக்கப் படைகள் இன்று கூறியுள்ளன.