வியட்நாம் நாட்டின் நாடரங் பகுதியில் நடந்த பிரபஞ்ச அழகிப் போட்டியில் (மிஸ் யுனிவர்ஸ்), வெனிசுலா அழகி டயானா மென்டோசா அழகிப் பட்டம் வென்றுள்ளார்.
நாடரங் பகுதியில் கடந்த சில நாட்களாக நடந்து வந்த பிரபஞ்ச அழகிப் போட்டியின் இறுதிச்சுற்று நேற்று (இந்திய நேரப்படி இன்று) நடந்தது.
இறுதிச்சுற்றின் கடைசி கட்டத்தில் மெக்ஸிகோ அழகி எலியாஸ் நஜீரா, டோமினிக் குடியரசை சேர்ந்த குரூஸ் கொன்சேலாஸ், கொலம்பியா அழகி டலியானா, வெனிசுலா அழகி மென்டோசா, ரஷ்ய அழகி வெரா கிரசோவா ஆகியோர் முன்னிலையில் இருந்தனர்.
முடிவில், வெனிசுலாவைச் சேர்ந்த மொன்டோசா பிரபஞ்ச அழகியாக அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து கடந்தாண்டு பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்ட ஜப்பானின் ரியோ மோரி, 2008ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் பட்டத்தை மென்டோசாவுக்கு வழங்கினார்.
மொத்தம் 80 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்ற இப்போட்டியில், இந்தியாவின் சார்பில் மிஸ் இந்தியா பட்டம் வென்ற சிம்ரன் கவுர் கலந்து கொண்டார்.