கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரித்து பேரல் ஒன்றிற்கு 200 டாலர்களை எட்டும் என்று வெனிசூலா அதிபர் ஹியூகோ சாவேஸ் கூறியுள்ளார்.
கச்சா விலை அதிகரிப்பு குறித்து வெனிசூலா அதிபரின் கணிப்பு இதற்கு முன்பு கூட சரியாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நியூயார்க் கச்சா எண்ணெய் சந்தையில் கச்சா விலை பேரல் ஒன்றிற்கு 136.38 டாலர்களை எட்டியதை அடுத்து சாவேஸ் இந்த கணிப்பை வெளியிட்டுள்ளார்.
நேற்று தொலைக்காட்சியில் அவர் பேசிய போது, கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலர்கள்தான் இருக்கவேண்டும், ஆனால் தொடர்ந்து அதிகரித்து வந்தால் 200 டாலர்கள் உயர்வை எட்டும் என்றார்.
அமெரிக்க டாலர் மதிப்பு வீழ்ச்சி, ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் அச்சுறுத்தல் மேலும் அமெரிக்க பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் அமெரிக்க அரசின் மோசமான போக்குகள் ஆகியவையே இந்த விலை உயர்விற்கு காரணம் என்றார்.
அமெரிக்காவிற்கு கச்சா எண்ணெய் வழங்கும் நாடுகளில் 5-வது மிகப்பெரிய நாடு வெனிசூலா என்பது குறிப்பிடத்தக்கது.