பாகிஸ்தான் தலை நகர் இஸ்லாமாபாதில், டென்மார்க் தூதரகம் அருகே நடத்தப்பட்ட தற்கொலை வெடி குண்டுத் தாக்குதலுக்கு அல் கய்டா பயங்கரவாத அமைப்பு பொறுப்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலில் சுமார் 8 பேர் பலியானதோடு, பலர் காயமடைந்தனர். இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட பாகிஸ்தான் காவல்துறை, 4 பேரை கைது செய்தனர். இவர்கள் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய இயக்கம் ஒன்றை சேர்ந்தவர்கள் என்று காவல்துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பிற்க் அல்கய்டா தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். முகமது நபிகளை கேலியாக சித்திரப்படுத்திய டென்மார்க் பத்திரிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அல்கய்டா தெரிவித்துள்ளது.