ஹான்ஸோங்: சீனாவில் கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட பூகம்பத்தின் விளைவாக கடும் பின் அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன. கடைசியாக ஏற்பட்ட பின் அதிர்வில் 6 பேர் பலியானதோடு, ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
சிச்சுவானில் உள்ள குவிங்சுவான் பகுதியில் மையம் கொண்ட இந்த பின் அதிர்வு ரிக்டர் அளவு கோலில் 6.4 என்று பதிவாகியுள்ளதாக சீன அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வடமேற்கு ஷான்ஸி மாகாணத்தில் உள்ள ஹான்ஸோங்கில் இந்த நில அதிர்விற்கு 4 பேர் பலியானதோடு 20 பேர் காயமடைந்துள்ளனர்.
நிலநடுக்க மையமான குவிங்சுவானில் பல கிராமங்களில் தொலைத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுதும் உணரப்பட்ட இந்த பின் அதிர்வில் சுமார் 2,70,000 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.