குண்டுவெடிப்பில் ஹர்கத் தொடர்பா வங்கதேசம் மறுப்பு

வியாழன், 15 மே 2008 (15:52 IST)
ஜெய்ப்பூரில் கடந்த செவ்வாயன்று நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலின் பின்னணியில் வங்கதேசத்தைச் சேர்ந்த ஹர்கத் உல் ஜிகாதி இஸ்லாமி அமைப்புக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதை வங்கதேச அரசு மறுத்துள்ளது.

வங்கதேச வெளியுறவு விவகாரங்களுக்கான ஆலோசகர் இப்திகார் அகமது சவுத்ரி வெளியுட்டுள்ள அறிக்கையில், ஜெய்ப்பூரில் நடத்தப்பட்டுள்ள தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது என்றும், வெட்கக்கேடானது என்று‌ம் கூறியுள்ளார்.

இந்த தாக்குதலில் ஹர்கத் உல் அமைப்பிற்குத் தொடர்பிருப்பதாக வெளியான தகவலுக்கு பதிலளிக்கும் வகையில், விரிவான விசாரணை நடத்தப்படுவதற்கு முன்பாகவே அதுபோன்ற முடிவுக்கு வரக் கூடாது என்று இப்திகார் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற கொடூர செயல்களில் ஈடுபடும் தீவிரவாதிகளுக்கு எந்தவித எல்லையும் கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமது இரங்கலைத் தெரிவிப்பதாகவும் வங்கதேச இடைக்கால அரசின் வெளியுறவு ஆலோசகர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்