அரண்மனையை காலி செய்ய மன்னருக்கு இறுதி கெடு!

புதன், 14 மே 2008 (12:03 IST)
நேபாள மன்னர் ஞானேந்திரா வரும் 27ஆம் தேதிக்குள் அரண்மனையை காலி செய்யாவிட்டால், அவரை வெளியேற்றப்போவதாக மாவோயிஸ்ட் தலைவர் பிரசந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதாவது மே 28ஆம் தேதி நேபாளம் தனது 240 ஆண்டுகால முடியாட்சியை முடிவுக்கு கொண்டு குடியரசு நாடாக தன்னை அறிவிக்கவுள்ளது. அன்றைய தினத்திற்கு முதல் நாள் அரண்மனையை மன்னர் காலி செய்யவேண்டும் என்று பிரசந்தா மன்னருக்கு தகவல் அனுப்பியுள்ளதாக நேபாள் இணையதள செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் மன்னர் அரசியல் நடைமுறைகளுக்கு ஒத்துழைப்பு அளித்தால் சாதாரண குடிமகன்களுக்கு கிடைக்கும் உரிமைகள் வழங்கப்படும் என்றார் பிரசந்தா.

ஆனால் மன்னர் இந்த எச்சரிக்கைகளைக் கண்டு அஞ்சவில்லை என்றும் அவர் முன்பை விடவும் தன்னம்பிக்கையுடன் இருப்பதாக மன்னராட்சியில் அமைச்சராக இருந்தவரும் ராஷ்ட்ரிய பிரஜதந்திரா கட்சியின் தலைவருமான கமல் தாபா கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்