புஷ் கருத்தை தவறாக புரிந்துகொள்ள வேண்டாம்-அமெரிக்கா!

சனி, 10 மே 2008 (11:27 IST)
இந்தியர்களின் பெருகிவரும் உணவுப் பழக்க முறைகளால் உணவுப் பொருட்கள் விலை அதிகரித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறிய கருத்தை உடன்பாடான பொருளில் புரிந்து கொள்ளுமாறு அமெரிக்கா இந்தியாவை கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஷான் மெக்கார்மக் கூறுகையில், அமெரிக்காவில் ஒருவரும் ஒரு தனித்த அரசை ‌விம‌ர்‌சி‌க்கவோ, ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுவது நல்ல விஷயம் அல்ல என்றோ கூறவில்லை என்றார்.

"உலகெங்கிலும் பொருளாதார வளம் உள்ளது, இந்தியாவாக இருந்தாலும் சீனாவாக இருந்தாலும் அல்லது எந்த நாடாக இருந்தாலும் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவருவது சர்வதேச அளவில் சிறந்ததுதானே.

இருப்பினும் பொது மக்கள் இந்த கருத்தினை எந்த கண் கொண்டு பார்க்கிறார்கள் என்று புரியவில்லை, ஆனால் இந்த கருத்தை எதிர்மறையான அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளவேண்டாம் என்று கூறக் கடமைப்பட்டுள்ளேன்".

இவ்வாறு கூறியுள்ளார் ஷான் மெக்கார்மக்.

வெப்துனியாவைப் படிக்கவும்