திபெத் பேச்சுத் தோல்வி- தலாய் லாமா தூதர்கள்!

வியாழன், 8 மே 2008 (15:51 IST)
சீன அரசுடன் திபெத் குறித்து சமீபத்தில் மே‌ற்கொண்ட பேச்சுக்கள் தோல்வியடைந்ததாக தலாய் லாமாவின் தூதர்கள் தெரிவித்தனர்.

திபெத்தில் நடந்த வன்முறைகளுக்கு சீனாவின் தவறான கொள்கைகளே காரண‌‌ம் என்பதை தாங்கள் வலியுறுத்தியதாக இந்த தூதுவர் குழுவில் சென்ற லோடி கியாரி, கெல்சாங் கியால்ட்சென் ஆகியோர் கூறினார்கள்.

"இருதரப்பினரும் எந்த பலதரப்பட்ட விடயங்களில் ஒத்துப் போக முடியவில்லை, இரு தரப்பினரும் ஒத்துக் கொண்ட ஒரே விடயம் அடுத்த சுற்று பேச்சு‌க்களு‌க்கு‌ச் செ‌‌ல்வது எ‌ன்பது மட்டுமே" என்று இந்த இருவரும் கூறியுள்ளனர்.

இந்த பேச்‌சி‌ன் போது திபெத்‌திய‌க் கைதிகளை விடுவிக்குமாறும், வன்முறையில் காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கவும், திபெத் மீதான அடக்கு முறைக் கொள்கைகளை கைவிடுமாறும் தாங்கள் வலியுறுத்தியதாக தலாய் லாமா தூதுவர்கள் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்