2008 பீஜிங் ஒலிம்பிக் சுடர் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தது. சீன மலையேற்ற வீரர்கள் இதனை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
ஒலிம்பிக் சுடர் பயணத்தின் இறுதிச் சுற்று என்று கருதப்படும் இந்த சுற்றில் உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை இன்று காலை ஒலிம்பிக் சுடர் அடைந்தது.
19 உறுப்பினர் கொண்ட இந்தக் குழு ஒலிம்பிக் சுடரை எவரெஸ்டிற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது. தென் மேற்கு சீனப்பகுதியின் திபெத் தன்னாட்சிப் பகுதியின் கீழ் வரும் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது.
பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே பல நாடுகளில் பயணம் மேற்கொண்டு வந்துள்ள ஒலிம்பிக் சுடர் தற்போது சீனாவின் முக்கிய நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.