திபெத் தலைநகர் லாசாவில் நிலவும் சூழ்நிலை தனக்க மிகவும் கவலை அளிப்பதாக நாடு கடந்து வாழும் புத்த மதத் தலைவர் தலாய் லாமா கூறியிருக்கிறார்.
இதற்கிடையில், திபெத்தியக் கலாசாரத்தை சீனா மதிக்க வேண்டும் என்றும், தலாய் லாமாவுடன் பேச்சு நடத்த வேண்டும் என்றும் சீன அரசை அமெரிக்கா வலியுறுத்தி இருக்கிறது.
பிரஸ்ஸல்ஸில் கூடியுள்ள ஐரோப்பியத் தலைவர்களும், சீனா கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றனர்.