பஹ்ரைனில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்!

திங்கள், 10 மார்ச் 2008 (18:29 IST)
பஹ்ரைனில் இந்தியர்கள் உட்பட 600 தொழிலாளர்கள் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 10 மாதங்களில் இந்த போராட்டம் இரண்டாவது முறையாகும்.

முகமது ஜலால் நிறுவனத்தை சேர்ந்த இந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி நேற்று முதல் வேலை நிறுத்தத்தை துவக்கியுள்ளனர். இதுதவிர, பஹ்ரைனில் உள்ள ஜாஜி ஹாசன் குழுமம் என்று கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்யும் இந்தியர்கள் உட்பட 1,120 ஆசிய தொழிலாளர்கள் இரண்டாவது நாளாக இன்றும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து அந்நாட்டு தொழிலாளர்கள் சங்க தலைவர் அப்துல்லா மிர்ஷா கூறுகையில், “எங்களது கோரிக்கை மிகவும் சாதாரணமானது. இந்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் பஹ்ரைன் தொழிலாளாளர்களின் சம்பளத்தை 2.5 சதவீதமும், அயல்நாடவாழ் தொழிலாளர்களின் ஊதியம் 66 அமெரிக்க டாலரும் உயர்த்த வேண்டும். பஹ்ரைன் நாட்டு சொந்த தொழிலாளர்கள் ஓட்டுநர், விற்பனையாளரும் கூட 527 அமெரிக்க டாலரை ஊதியமாகவும், மற்ற படிகளையும் பெறுகின்றனர். ஆனால், அயல்நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் 132 டாலர் முதல் தான் ஊதியம் பெறுகின்றனர்” என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்