சிறிலங்காவில் மோதல்: 4 படையினர் பலி!
புதன், 27 பிப்ரவரி 2008 (14:01 IST)
சிறிலங்காவில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் நான்கு படையினர் கொல்லப்பட்டதுடன் 13 பேர் படுகாயமடைந்து உள்ளனர்.
சிறிலங்காவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், யாழ்ப்பாணம், வவுனியா, வெலிஓயா பகுதியில் நடைபெற்ற மோதலில் படையினர் 4 பேர் பலியானதுடன், 13 பேர் படுகாயம் அடைந்ததாக சிறிலங்க பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த மோதலில் விடுதலைப் புலிகள் 46 பேர் பலியானதாகவும், 5 பேர் படுகாயம் அடைந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. எனினும் இது குறித்துப் புலிகள் தரப்பில் இருந்து எந்த தகவலும் இல்லை.