தெற்கு ஆஃப்கானிஸ்தானில் நடந்த கண்ணி வெடித் தாக்குதலில் 7 ராணுவத்தினர் பலியாகினர்.
பாகிஸ்தான் எல்லையோரத்தில் உள்ள குனார் மாகாணத்தில் சாலை அமைக்கும் நிறுவனத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் ராணுவத்தினரின் வாகனம் கண்ணிவெடியில் சிக்கியது. இதில், அதிலிருந்த 7 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
இத் தாக்குதலுக்கு தாலிபான்கள் தான் காரணம் என்று ராணுவத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஹமீத் கர்சாய் அரசு மீது தாலிபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை தொடுத்து வருவதும், தாலிபான்களின் தாக்குதல்களை முறியடிக்க 10 ஆயிரம் சர்வதேசப்படை வீரர்கள் ஆஃப்கானில் குவிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.