ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடும், முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரிக்கும், அமெரிக்க ஆப்பிரிக்கரான பாரக் ஒபாமாவுக்கும் இடையில் நேரடியான மோதல் ஏற்பட்டுள்ளது.
பல்வேறு மாகாணங்களில் நடந்த வாக்கெடுப்பில் ஹிலாரியும், ஒபாமாவும் சம பலத்துடன் இருந்து வந்த நிலையில், சமீபத்திய தேர்தல்களில் ஹிலாரியை பின்னுக்குத் தள்ளி ஒபாமா முன்னேறி வருகிறார்.
புதன்கிழமை வெளியான விஸ்கான்சின், ஹவாய் மாகாணங்களின் தேர்தல் முடிவுகளும் ஒபாமாவுக்கு சாதகமாக அமைந்துள்ளன. ஹிலாரியின் கோட்டை என்றழைக்கப்பட்ட விஸ்கான்சின் மாகாணம், தனது சொந்த மாகாணமான ஹவாய் ஆகிய இரண்டிலும் ஒபாமா வெற்றிபெற்றுள்ளார்.
இதனால் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள ஹிலாரி மார்ச் 4-ம் தேதி நடைபெறும் ஒகியோ, டெக்ஸாஸ் மாகாணங்களின் தேர்தலின் முடிவுகளை பெரிதும் எதிர்பார்த்திருக்கிறார். வெள்ளை இன மக்கள் அதிகம் நிறைந்துள்ள இந்த மாகாணங்களில் ஹிலாரிக்கு செல்வாக்கு இருப்பதாக கூறப்பட்டாலும், ஒபாமாதான் வெற்றி பெறுவார் என்று நம்பப்படுகிறது.
ஆளும் குடியரசு கட்சியில் ஜான் மெக்கைன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். விஸ்கான்சின் மாகாண தேர்தலில் அவர் வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்த இடத்தில் மைக் ஹக்கபீயும், 3-வது இடத்தில் ரோன் பௌலும் உள்ளனர்.